1 | கடன் வகை | வீட்டு வசதிக்கடன் |
2 | கடன் வழங்கும் காரியங்கள் | A.புதிய வீடு கட்டுதல் / அடுக்குமாடி குடியிருப்பு வாங்குதல் B.கட்டி முடிக்கப்பட்ட வீடு வாங்குதல் C.வீடு வாங்குவதாக இருந்தால் , கட்டடம் கட்டப்பட்டு 15 ஆண்டுக்குள் இருக்க வேண்டும். D.வீடு மேம்படுத்த/புதுப்பிக்க/பழுது பார்க்க. E.வீடு மேலும் 25 ஆண்டுகளுக்கு நிலைத்திருக்கத்தக்கதாக இருக்க வேண்டும். |
3 | வயது வரம்பு | 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் இருக்க வேண்டும் |
4 | கடன் பெறத் தகுதியுடையவர்கள் | A.விண்ணப்பதாரர் நிரந்தர பணியில் உள்ளவராகவோ/தொழில் செய்யபவர்களாகவோ / தொடர்ந்து நிரந்தர மாத வருமானம் ஈட்டுபவர்களாக இருக்க வேண்டும். B.வங்கியின் இணை உறுப்பினராக இருத்தல் வேண்டும். |
5 | அனுமதிக்கும் கடனின் அளவு | வீடு வாங்குதல் மற்றும் விரிவுப்படுத்துதல் ஆகிய நோக்கங்களுக்கு உச்ச அளவாக ரூ.30/- லட்சம் வரை கடன் அனுமதிக்கப்படும். வங்கியால் நியமிக்கப்பட்ட பொறியாளரிடம் திட்ட மதிப்பீடு மற்றும் வீட்டின மதிப்பீடு பெறவேண்டும். |
6 | வருமானம் | A.மனுதாரர் மாத ஊதியம் பெறுபவராக இருந்தால், வீட்டுக்கு எடுத்துச் செல்லும் ஊதியம் (Home Carrying Salary) மொத்த ஊதியத்தில் 30 விழுக்காட்டுக்கு குறையாமல் இருக்க வேண்டும். B.மனுதாரரின் மனைவி/ கணவன்-மகன், மகள் ஆகியோர் வருவாய் ஈட்டுபவர்களாக இருந்தால் இந்த வருவாயையும் கணக்கில் எடுத்துக் கொள்ளலாம். இதற்கு சான்று இணைக்க வேண்டும்.ஊதியச்சான்று அல்லது பட்டய கணக்காளர் சான்று அல்லது வருமானவரி தாக்கல் செய்த படிவ நகல் ஆகிய ஏதாவது ஒன்று சமர்ப்பிக்க வேண்டும். |
7 | மனுதாரரின் சொந்த நிதி | A.ரூ.10/- லட்சம் வரை உள்ள கடனுக்கு பொறியாளர் மதிப்பீட்டில் - 15% B.ரூ10/- லட்சத்திற்கு மேல் பொறியாளர் மதிப்பீட்டில் - 20% |
8 | கடன் பட்டுவாடா செய்யும் முறை | A.கடன் அனுமதியில் காணப்படும் நிபந்தனைகள் நிறைவு செய்யப்படவேண்டும். தனது சொந்த நிதியில் கட்டிடப்பணியை தொடங்க வேண்டும். சொந்த நிதியை பயன்படுத்தியதற்கு பொறியாளர் சான்று கொடுத்த பின்னர் கடன் தொகையில் 20% முதல் தவணை பட்டு வாடா செய்ய வேண்டும். B.கட்டிடப்பணி முடிக்கப்பட்டதை பொறியாளர் பார்வையிட்டு சான்று செய்த பின்னர், இரண்டாவது தவணை 40% பட்டுவாடா செய்யப்பட வேண்டும். C.இரண்டாவது கட்டிடப்பணி முடிக்கப்பட்டதை பொறியாளர் பார்வையிட்டு சான்று கொடுத்த பின்னர் மூன்றாவது தவணை 40% பட்டுவாடா செய்யப்பட வேண்டும். D.ஏற்கனவே கட்டப்பட்ட வீட்டை வாங்கினால், பொறியாளர் மதிப்பீடு பெற்று அடமானம் செய்த பின்னர், ஒரே தவணையில் பட்டுவாடா செய்ய வேண்டும். E.பட்டுவாடா செய்யும்போது, ஒவ்வொரு தவணைக்கும் வங்கி அலுவலரும் நேரில் சென்று பார்வையிட்டு பட்டுவாடா செய்ய வேண்டும். F.கட்டியவீடு மற்றும் பிளாட் (அடுக்குமாடி குடியிருப்பு) வாங்கும் பொழுது அடுத்த மாதத்திலிருந்தே தவணைத்தொகையினை செலுத்த வேண்டும். |
9 | வட்டி விகிதம் | வட்டி விகித அட்டவணையில் உள்ளபடி. தற்போது Floating Rate (EMI/Simple) & Fixed Rate (EMI/Simple) - ல் வழங்கப்படுகிறது. |
10 | தவணைக் காலம் நிர்ணயம் | A.வாங்குவதற்கு 20 வருடங்கள். B.மனுதாரர் 70 வயதை நிறைவு செய்வதற்கு முன்பே, அசல் மற்றும் வட்டியை திரும்ப செலுத்தும் அளவில், தவணை நிர்ணயிக்கப்பட வேண்டும். C.கட்டிடம் கட்டி முடித்து பொறியாளர் சான்று (Completion Certificate) பெறப்பட வேண்டும். குடிபுகுந்த உடனோ அல்லது முதல் தவணைத்தொகை பட்டுவாடா செய்த தேதியிலிருந்து 12 மாத காலம் முடிந்தோ இதில் எது முன்னரோ அதிலிருந்து முதல் தவணைக்காலம் நிர்ணயம் செய்யப்படும். D.கட்டியவீடு மற்றும் பிளாட் (அடுக்குமாடி குடியிருப்பு) வாங்கும் பொழுது அடுத்த மாதத்திலிருந்தே தவணைத்தொகையினை செலுத்த வேண்டும். |
11 | தவணைத் தொகை செலுத்தும் முறை | மாதாந்திர தவணை தொகையை ( Equal Monthly Installment (EMI)) ஒவ்வொரு மாதமும் 10ம் நாளுக்கு முன் வட்டியுடன் செலுத்த வேண்டும். |
12 | அபராத வட்டி | 1.5 சதவீதம் |
13 | கடனுக்கு ஈடு/ஆதாரம் | புதிய வீடு அல்லது கட்டப்பட்ட வீடு வங்கிக்கு அடமானம் செய்து கொடுக்கப்பட வேண்டும். இணைந்து விண்ணப்பம் கொடுப்பவர்கள், அடமானத்தில் அவர்களது வாரிசுகளையும் காட்ட வேண்டும். அடமானத்திலும் புரோநோட்டிலும் கூட்டாக கையொப்பமிட வேண்டும். |
14 | வழங்க வேண்டிய ஆவணங்கள். |
A.சொத்துக்களுக்கான மூலப்பத்திரம். B.மனுதாரர் பெயரில் பட்டா ( கணினி பட்டா) C.30 வருட வில்லங்கச்சான்று . D.அடங்கல் பதிவேடு . E.ஒப்புதல் செய்யப்பட்ட வீட்டு / மனை வரைபடம் (BLUE PRINT). F.பதிவு பெற்ற பொறியாளர் (Charted Engineer) மதிப்பீட்டு அறிக்கை. G.திட்ட குழுமம் / ஊராட்சி ஒப்புதல் சான்று நகல். H.வட்டாச்சியரிடமிருந்து வருவாய் சான்றிதழ். I.ஊராட்சி / நகராட்சியிடமிருந்து கட்டட வயது சான்று. J.தொழில் செய்பவர்களுக்கு கடந்த மூன்றாண்டு வருமான வரி படிவ நகல். K.தனிநபர் அடையாள அட்டை (Individual identity card). L.கடன் தாரர் மற்றும் பிணையதாரர் புகைப்படங்கள். M.இறுதியாக மின் கட்டணம், சொத்துவரி செலுத்திய ரசீது. N.தொழில் நிறுவன முகவரி சான்று ( மாத ஊதியம் பெறாதவர்). O.விவசாயிகள் மற்றும் மற்றவர்களின் வருமானம் ரூ.10,000/- அல்லது அதற்கு மேல் இருந்தால், வட்டாச்சியர் அல்லது பட்டய கணக்காளர் வருவாய் சான்று பெற்று இணைக்க வேண்டும். P.ஊதியம் வரவு வைக்கப்படும் வங்கிக் கணக்கு, கடந்த ஆறு மாதங்களுக்கு பெற்று சமர்ப்பிக்கப்பட வேண்டும். Q.பிளாட் (அடுக்குமாடி குடியிருப்பு) வாங்கும் பொழுது அசல் ஒப்பந்தம் (பிளாட் கட்டி கொடுப்பவர்களிடம் செய்து கொண்டது) இணைக்கப்படவேண்டும். R.சொத்தின் அசல் பட்ட ( நத்தம் நிலவரி பட்ட அல்லது தூய சிட்டா ஆகியவை ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது). S.CIBIL அறிக்கை. T.வங்கி கோரும் இதர ஆவணங்கள். |
15 | காப்பீடு | A.வீடு, வங்கியின் கூட்டுப்பெயரில் காப்பீடு செய்யப்பட வேண்டும். நெருப்பு , வெள்ளம், புயல் ஆகியவற்றுக்கும், கடன் மற்றும் உத்தேச வட்டி சேர்த்து காப்பீடு செய்ய வேண்டும். B.பாலிஸியை வருடா வருடம் புதுப்பித்து வங்கியில் ஒப்படைக்க வேண்டும். C.கடன்தாரர் விருப்பினால் கடன்தாரர்கள் இல்லாத சூழ்நிலை (மரணம் அல்லது விபத்து ஏற்பட்டு இருந்தாலோ) காப்பீடு நிறுவனம் கடன் தொகை முழுவதையும் நேர்செய்யுமாறு காப்பீடு நிறுவனம் மூலம் போதிய காப்பீட்டினை கடன்தாரர் செய்து கொள்ளலாம். |
16 | சட்ட ஆலோசகர் மற்றும் G S T கட்டணம் | சட்ட ஆலோசகர் கட்டணம் 0.50% குறைந்தது ரூ 1,500/- உச்சபட்சம் ரூ 7,500/- + G S T கட்டணம் |
17 | பொது | மேற்படி நடைமுறைகளை மாற்ற, புதிய நடைமுறைகளை ஏற்படுத்த வங்கிக்கு முழு உரிமை உண்டு. |
Copyright @2020 Design & Developed by KCC BANK